இயக்குநருக்கு பரிசளித்த சசிகுமார்

Published On:

| By Kavi

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த பத்தாண்டுகளாக வெளியான எந்தவொரு படமும் சுமாரான வெற்றியை கூட பெறவில்லை. இந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து படத்தின் இயக்குநர் மந்திர மூர்த்திக்கு  நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்தார்.

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்திருந்தார். கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் வெகுஜன பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Sasikumar celebrating Ayodhya victory

இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழு சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்தார்.

இராமானுஜம்

மார்ச் 22ல் ஓபிஎஸ் மனு ; மார்ச் 23ல் சசிகலா வழக்கு விசாரணை!

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share