சசிகுமாரின் அயோத்தி

Published On:

| By Balaji

சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் படம் ‘அயோத்தி.

பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். அயோத்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது என்றார்.

மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,என்றார் அவர்.

குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

**அம்பலவாணன்**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share