அதிமுக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்கள் மீது, எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் உடனடியாகப் புகார் தட்டிவிடுகிறார்கள். இப்படி தினமும் ஏகப்பட்ட கடிதங்களும், ஃபேக்ஸ்களும் கார்டனில் வந்து குவிகிறது.
உசிலம்பட்டி தொகுதிக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் நீதிபதி. (பெயரே அதுதான்!) இவர், சில வருடங்களுக்குமுன்பு சசிகலா நற்பணி மன்றம் என்று ஒன்றைத் தொடங்கினார். இதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை, கார்டனில் நடந்த நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார்கள். அதிமுக-வில் இந்தமுறை சசிகலா சொல்பவர்களுக்கே வேட்பாளர் பட்டியலில் முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், சசிகலா நற்பணி மன்றம் வைத்தவரை நேர்காணலுக்கு அழைத்திருக்கிறார்கள். அதிமுக வட்டாரத்தில் இந்தத் தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
