நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகிய இருவரும் கொடநாடு பங்களாவுக்கு சென்று வந்தனர். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா கொடநாடு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்தநிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 18) மாலை சசிகலா கொடநாடு பங்களாவிற்கு சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்துள்ளேன். எங்களுடைய தோட்டத்துல நீண்டகாலமா காவலாளியா இருந்த நல்ல மனிதர் ஓம் பகதூர் இந்த இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குற்றவாளிகள் யார் என்பதை தெய்வமாக இருந்து அம்மா அவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வாங்கி கொடுப்பார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அம்மாவுக்காக பூஜை பண்ண தான் நான் இங்க வந்துருக்கேன். விரைவில் அவங்க சிலை திறக்கப்படும். அதிமுக ஒன்றிணைவதற்கு நான் நடவடிக்கை எடுத்துக்கிட்டே இருக்கேன்.
நிச்சயமா அந்த பணியும் நல்ல படியா முடியும். ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போகணும். அதுதான் அரசியல்ல நல்லதுன்னு நினைக்கிறேன். அந்தமாதிரியான ஒரு சூழ்நிலை வரும்போது நிச்சயம் அது நடக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…