எல்லாமே சர்ப்ரைஸாக நடக்கும் :செங்கோட்டையன், ஓபிஎஸ்-ஐ சந்தித்த பின் சசிகலா பேட்டி!

Published On:

| By Kavi

அதிமுகவை இணைப்பதில் எல்லாமே சர்ப்ரைஸாக நடக்கும் என்று சசிகலா கூறியுள்ளார்.

பசும்பொன்னில் இன்று (அக்டோபர் 30) முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நடைபெற்றது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மூன்று பேரும் சேர்ந்து வந்தனர். தொடர்ந்து வந்த சசிகலாவை ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும் சந்தித்தனர். டிடிவி தினகரன் சந்திக்கவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ‘அதிமுகவை இணைப்பதில் எல்லாமே சர்ப்ரைஸாக நடக்கும். அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று சொல்கிறேன். அதைப்பாருங்களேன்… வெயிட் அண்ட் சீ. தேர்தல் தான் முடிவு.

தொண்டர்களுக்காகத்தான் நான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

ADVERTISEMENT

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றிய கேள்விக்கு, ‘தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அதிமுக உறுப்பினர்கள் தொண்டர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியுமா. எல்லா தொண்டர்களும் என்னை பார்க்கிறார்கள். எனவே எல்லோர் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியுமா’ என கூறினார்.

மேலும் அவர், தமிழ்நாட்டில் கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. 14 பல்கலைக் கழங்களில் துணை வேந்தர்கள் இல்லை என திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share