அதிமுக பொதுச்செயலாளர் பதவி : சசிகலா கேவியட் மனு!

Published On:

| By Kavi

அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ADVERTISEMENT

2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அவரை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் நீதிமன்றம், சசிகலா வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த ஜனவரி 23ஆம் தேதி நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது சசிகலா தரப்பில் பதிவுத் துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செம்மலையின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தனது கருத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 30) கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவுக்கு எதிரான வழக்கு நடைபெற்றுத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக சசிகலா தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

மாஜி அமைச்சருக்கு எதிராக அரசு மேல்முறையீடு!

திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம்: ஹன்சிகா பேட்டி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share