விபத்து எதிரொலி : விமான நிலைய சேவை நிறுத்தம்!

Published On:

| By christopher

Sardar Vallabhbhai Patel International Airport closed

ஏர் இந்தியா விமான விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் (SVPIA) சேவைகள் அனைத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. Sardar Vallabhbhai Patel International Airport closed

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மொத்தம் 242 பேருடன் லண்டன் புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் AI171 இன்று (ஜூன் 12) மதியம் 1:38 மணியளவில் விபத்தில் சிக்கியது. காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மீட்புப் பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து தீவிரப்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ”ஏர் இந்தியா விமான விபத்து எதிரொலியாக, அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன” என விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share