சர்தார், பிரின்ஸ்: ட்விட்டரில் வைரலான விமர்சனங்கள்!

Published On:

| By Selvam

ட்விட்டரில் ’பிரின்ஸ்’ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையும், ’சர்தார்’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களையும் சினிமா ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக ’பிரின்ஸ்’ மற்றும் ’சர்தார்’ படங்கள் இன்று (அக்டோபர் 21) திரையரங்குகளில் வெளியானது.

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ’பிரின்ஸ்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.

இந்த படத்தில் மரியா கதாநாயகியாகவும் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

https://twitter.com/ragulparasuram/status/1583271145415282689?s=20&t=VI0hiyHFGedpa__yzwBFJw

அதே போல மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படமும் இன்று வெளியானது. ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் ’சர்தார்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

’பிரின்ஸ்’ திரைப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு கொட்டும் மழையில் சென்றார்.

அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களது வரவேற்பை ஏற்ற சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அதுபோல், சென்னை காசி தியேட்டரில் நடிகர் கார்த்தி ’சர்தார்’ திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டுகளித்தார். கார்த்திக்கு மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

’பிரின்ஸ்’ திரைப்படத்திற்கு ட்விட்டரில் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது. அதே நேரத்தில் சர்தார் திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளது. அதில் ’பிரின்ஸ்’ படம் குறித்து சிலர், ‘குடும்பங்கள் கொண்டாடும் சிரிப்பு படம்’ என்று பதிவிட்டுள்ளனர். ‘சர்தார்’ படம் குறித்து, ’நல்ல தரமான ஆக்‌ஷன் படம். அருமையான திரைக்கதை’ எனப் பதிவிட்டுள்ளனர்.

https://twitter.com/barcathala_/status/1583299897130110977?s=20&t=32bsXrXCtRD9c3qNevfdCQ
https://twitter.com/Sudhkaar1/status/1583294714370875393?s=20&t=EP82Cnv-mUjPWWakEXugDw
https://twitter.com/pudhuvaikarthi/status/1583279758648827904?s=20&t=XbM1ZfLJ3XWe6DxFDaSWew
https://twitter.com/DineshR60925532/status/1583313373508538369?s=20&t=8x64P2nly9LPftsSgzjpew

செல்வம்

தீபாவளி: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் தொடக்கம்!

போக்குவரத்து விதிமீறல் அரசாணை: நாராயணன் திருப்பதி வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share