கார்த்தி படப்பிடிப்பில் விபத்து: ஸ்டன்ட் மாஸ்டர் உயிரிழந்த சோகம்!

Published On:

| By Selvam

கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின்போது, ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதி வெளியானது. இப்படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்றதால், இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் தொடங்கியது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் நேற்று (ஜூலை 16) படமாக்கப்பட்டு வந்தநிலையில், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சண்டை பயிற்சியாளர் ஏழுமலை பாதுகாப்பு கவசங்கள் எதுவும் அணியாததால் அவரது மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாண்டியா, பண்ட் இல்லை… இவர்தான் புதிய டி20 கேப்டனா?

மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share