இதெல்லாம் கமல் சாரோட நிப்பாட்டிக்கங்க… மாயாவின் மூக்குடைத்த விக்ரம் தந்தை!

Published On:

| By Manjula

பிக்பாஸ் வீட்டில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் 79-வது நாளான நேற்று (டிசம்பர் 19) சரவண விக்ரம், அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு ஆகியோரின் பெற்றோர் வந்திருந்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு பெற்றவர்களை பார்த்ததால் அனைவரும் குழந்தைகள் போல பல்வேறு விதமான உணர்ச்சிகளுடன் அன்பு மழையில் நனைந்தனர்.

இதில் சரவண விக்ரம் தந்தையுடன் அவரது அம்மாவும் வந்திருந்தார். அனைவரிடமும் கலகலப்பாக அவர் பேசியதை பார்த்து மற்றவர்களும் ஜாலியாக அவரிடம் உரையாடினர்.

பேசிக்கொண்டு இருக்கும் போது காமெடி கெட்டப்பில் இருந்த மாயாவும் அதில் கலந்து கொண்டார். அப்போது விக்ரம் தந்தை,”நீங்க எல்லாம் வச்சு செய்றீங்களே அவன. ஆள் இருக்கும் போதும் செய்கிறீர்கள். இல்லாத போதும் செய்கிறீர்கள்”என கிண்டலடித்தார்.

பதிலுக்கு மாயா ஏதோ சொல்ல முயற்சி செய்ய, ” இதெல்லாம் கமல் சார் ஏத்துக்குவாரு. அவரிடம் சொல்லுங்கள். என்னிடம் வேண்டாம். நான் 24 மணி நேரமும் நிகழ்ச்சி பார்க்கிறேன்,” என மாயா பதிலே சொல்ல முடியாதபடி ஊசி போல நறுக்கென்று பதில் அளித்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் உங்க பையன் வீட்டுக்குள்ள 80 நாளா செய்யாத ஒரு விஷயத்தை, நீங்க ஒரே நாள்ல செஞ்சிட்டீங்க என அவரை பாராட்டி வருகின்றனர்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு அதிகம் சப்போர்ட் செய்வதாக பார்வையாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

நான்கு அணிகள் கடும் போட்டி… கோடிகளில் ஏலம் போன முதல் பழங்குடி வீரர்… யார் இந்த ராபின் மின்ஸ்?

நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share