”என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு”: சித்தார்த்தை ஒதுக்கிவைத்த சரத்குமார்

Published On:

| By Kavi

சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற எவர்கிரீன் காட்சியான, “என்ற குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு” காட்சியை நடிகர் சரத்குமாரும், தேவையானியும் ரீகிரியேட் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. sarathkumar devaiyani recreate suriyavamsam scene

27 ஆண்டுகளுக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியான படம் சூர்யவம்சம். நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, தேவயானி மற்றும் மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ADVERTISEMENT

அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் எவர்க்ரீன் என்றே சொல்லலாம். ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது எல்லாம் படத்தில் தான் என சூர்யவம்ச கதையை இன்றும் மக்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஞாயித்துக் கிழமையானா போதும் சின்ராச கையிலயே புடிக்கமுடியாது, காலம் எவ்வளவு வேகமா சுழலுது பாத்தீங்களா, பாயசம் சாப்பிடுங்க ப்ரண்ட்ஸ் என படத்தில் இடம்பெற்ற அத்தனை வசனங்களும், இப்போதும் மீம்களாக, வாட்ஸ் அப் ஸ்டிக்கராக வலம் வருகின்றன.

ADVERTISEMENT

இப்படி 27 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மனதில் இன்னும் நீங்கா இடத்தை பிடித்திருக்கும் சூர்யவம்சம் படக் காட்சியை சரத்குமாரும் தேவயானியும் தற்போது ரீகிரியேட் செய்துள்ளனர்.

அந்தப் படத்தில் மகன் சரத்குமாரை ஒத்துக்கி வைத்து விட்டு புகைப்படம் எடுக்கும் காட்சியைதான் தற்போது எடுத்துள்ளார்கள்.

ADVERTISEMENT

அதில் தேவயானி ’என்னங்க.. சின்ராசு’ என்று கேட்க, சரத்குமார் ’என்ற குடும்பத்தில் எல்லாரும் வந்தாச்சு… சீக்கிரம் எடு!” என்று கூறுகிறார்.

இந்த ரீகிரியேஷனில் மகன் சரத்குமார் கதாபாத்திரத்தில் சித்தார்த் ஓரமாக நின்று பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோர் நடித்துள்ள 3BHK படம் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழு, அந்த காட்சியை ரீகிரியேட் செய்திருக்கிறது. sarathkumar devaiyani recreate suriyavamsam scene

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share