“ஈரம்” இயக்குனரின் அடுத்த படம்: போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Published On:

| By Selvam

ஈரம், குற்றம் 23 போன்ற வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன்.

குற்றம் 23 படத்திற்கு பிறகு மீண்டும்  அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸை இயக்கினார் அறிவழகன். அந்த வெப் சீரிஸை தொடர்ந்து மீண்டும் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து பார்டர் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாக வில்லை.

இதனை தொடர்ந்து நடிகர் ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் சப்தம். ஈரம் படம் போலவே இந்த படமும் ஒரு ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. 7G ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 14) சப்தம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுகவிடம் எம்.பி.சீட் கேட்கும் தவாக… அழைக்கும் அதிமுக : வேல்முருகன் பேட்டி!

நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share