சந்தானத்தின் நான் ஸ்டாப் லூட்டி: வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர் எப்படி?

Published On:

| By Monisha

Santhanam Vadakkupatti Ramasamy Trailer

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்த டிக்கிலோனா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் யோகி – சந்தானம் கூட்டணியில் உருவாகி உள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி.

பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 12) வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் கதை 1970களில் நடக்கிறது. ஒரு விசித்திரமான கிராமத்தில் வாழும் வித்தியாசமான மனிதர்களின் நான் ஸ்டாப் லூட்டி தான் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வைப். இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள சந்தானத்தின் காமெடி வசனங்கள் அல்டிமேட்.

வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Vadakkupatti Ramasamy Official Trailer | Santhanam, Megha Akash | Karthik Yogi | Icon Music South

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: காளான் பிரியாணி!

அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்: அரசாணை வெளியானது!

நெல்லையை தொடர்ந்து கடலூர்: மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி!

அயலான்ல தனுஷா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share