புலி வாலை பிடித்த சந்தானம்

Published On:

| By Kavi

கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’.

இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து சந்தானம் மீண்டும் த்ரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இதனை சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் சந்தானம் புலியுடன் விளையாடும் வீடியோவை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அந்த பதிவில் “இதற்கு பேர் தான் புலி வாலை பிடிக்கிறதா” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

100 நாள் வேலை திட்டம்: வருகைப்பதிவில் மாற்றம்!

கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share