சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் அஞ்சலி!

Published On:

| By Minnambalam

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மூத்த தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும் தகைசால் விருது பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவம்பர் 15) காலை உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இவரது மறைவிற்கு அரசியல் கடந்து அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சங்கரய்யா உயிரிழந்த செய்தியறிந்த முதல்வர் மருத்துவமனைக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்றும் இரங்கல் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

தொடர்ந்து சங்கரய்யாவின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

ADVERTISEMENT

அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்சி ஆனந்த், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் மன்சூர்அலிகான் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

sankaraiah body in marxist communist party office

அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று சங்கரய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருவதால்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாளை சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 36 பேர் பலி!

50வது சதம்… சச்சினின் 2 பெரிய சாதனைகளை முறியடித்த கோலி

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share