பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக இவரது இயக்கத்தில் ஆலியா பட் நடிப்பில் வெளியான கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும், அந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது.
சமீபத்தில் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இவரது அடுத்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட், நடிகர் விக்கி கௌஷல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு “லவ் & வார்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி – ரன்பீர் கபூர் கூட்டணி முதன்முறையாக இணைவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி கூட்டத்துக்கு பண விநியோக தகராறு: அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு!
