ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்த காலகட்டத்தில், தற்போது ஆந்திர முதல்வராக உள்ள சந்திரபாபு நாயுடுவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி 2019 – 2024 வரை பதவி வகித்தார்.
இவருடைய ஆட்சிக்காலத்தில், அப்போதையை சி.ஐ.டி தலைவராகவும் பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு சேவையின் இயக்குநராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய், சந்திரபாபு நாயுடுவை ஆந்திரா திறன் மேம்பாட்டு மையத்தின் ரூ.371 கோடி நிதியை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்தார்.
2024ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில்தான் அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் கடந்த டிசம்பர் 3 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா தலைமைச் செயலாளர் நீரப் குமார் பிரசாத், டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட அரசு உத்தரவில், “பேரிடர் மேலாண்மை துறை வலைத்தளத்திற்கு தேவையான எலக்ட்ரானிக் உபகரணங்களுக்காக விடப்பட்ட ஏலத்தில் அரசு பணத்தை முறைகேடாக சஞ்சய் சிங் பயன்படுத்தியுள்ளார்” என்ற குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜெயலலிதா நினைவு தினம்… எடப்பாடி மரியாதை!
குளிர்ந்த நீரில் ஊற வச்சா சாதமாக மாறும் ‘மேஜிக்’ அரிசி… என்ன நடக்கும்?
Comments are closed.