ரேஷன் கடைகள் மூலம் நாப்கின்கள்? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது என்ன?

Published On:

| By Mathi

High Court Madras

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை வழங்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா சென்னை உயர்நீதிமன்ற்த்தில் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதில்,

  • சானிட்டரி நாப்கின்களின் அதிக விலைல்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\
  • இதனால் கிராமப்புற, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
  • பெண்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
  • மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை அத்தியாவசியப் பொருளாகக் கருதி ரேஷன் கடைகள் மூலம் எளிதாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இம்மனுவை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ADVERTISEMENT

இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில்,

  • ரேஷன் கடைகள் மூலம் நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.4,000 கோடி செலவாகும்.
  • ரேஷன் கடைகள் மூலம் நாப்கின்கள் வழங்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து

ADVERTISEMENT
  • ரேஷன் கடைகள் மூலமாக நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
  • வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்கள் எண்ணிக்கை விவரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share