பிளாக் ஷீப் ராம் நிஷாந்த்தை பாராட்டிய சமுத்திரக்கனி: ஏன் தெரியுமா?

Published On:

| By Selvam

பிரபல யூட்யூப் சேனல் ஆன பிளாக் ஷீப்பில் வெளியான “நான் கோமாளி” என்ற வெப் தொடரின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றவர் ராம் நிஷாந்த்.

“நான் கோமாளி” தொடரில் ஆட்டோக்காரர், உதவி இயக்குநர், அரசு பள்ளி ஆசிரியர், பார்பர் என ஒவ்வொரு துறை சார்ந்த சாமானிய மனிதர்கள் தங்களது தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்கள் குறித்தும், அவர்களின் மனப்பக்குவம் குறித்தும் நடித்து வந்த ராம் நிஷாந்த் இந்த தொடரின் மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, பாபா பிளாக் ஷீப் போன்ற திரைப்படங்களிலும் நடித்து தன் திறமையை நிரூபித்து காட்டினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் ராம் நிஷாந்த் “நான் கோமாளி” வெப் தொடரின் புதிய சீசனில் நடித்துள்ளார்.

பிளாக் ஷீப் தயாரிப்பில் விசாகன் ஜெயகதிர் இயக்கியுள்ள “நான் கோமாளி” புதிய சீசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த புதிய சீசனில் நடிகர் ராம் நிஷாந்த் 10 வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நான் கோமாளி டிரைலரை பார்த்த நடிகர் சமுத்திரக்கனி நடிகர் ராம் நிஷாந்தையும் இந்த தொடரின் இயக்குநர் விசாகன் ஜெயகதிரையும் மனமார பாராட்டும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் நடிகர் சமுத்திரக்கனி கூறியதாவது, “வணக்கம்… ரொம்ப நாள் கழிச்சு ஒரு தரமான டிரைலரை பார்த்து இருக்கேன். எளிய மனிதர்களின் வலிய சொல்ற ஒரு டிரைலர், அந்த டிரைலர்ல ஒரு இடம் வரும்போது என்னையே நான் நினைச்சுகிட்டேன்.

இப்படி எல்லாம் உழைச்சா வீடு இருக்கும் கார் இருக்கும் ஆனால் நீ இருக்க மாட்டனு, நிறைய மிடில் கிளாஸ் உடைய பிரச்சனை அதுதான். அந்த நிலை மாறனும். அடுத்தவன் முடிவு எடுக்கிறான் நம்ம எப்படி வாழனும்னு. நம்ப முடிவு எடுப்போம் மகிழ்ச்சியா இருப்போம்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ராம் நிஷாந்தை பார்த்து “தம்பி 10 கேரக்டரும் நீயே பண்ணி இருக்க வாழ்த்துக்கள், நல்ல வருவீங்க” என்று பாராட்டினார். அதன் பின் தொடரின் இயக்குநர் விசாகன் ஜெயகதிரை பார்த்து, “இதுதான் நம்ம ஆயுதம் நம்ம ஆயுதத்தின் மூலமா நமக்கான முயற்சிகள செஞ்சுகிட்டே இருப்போம்” என்று கூறினார்.

நான் கோமாளி தொடரின் டிரைலர் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

Naan Komali Trailer Announcement Video | Ft. Samuthrakani | Blacksheep

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: எங்கே சென்றார் எடப்பாடி? பாதி வழியில் திரும்பிய நிர்வாகிகள்!

6 ஆண்டுகளாக தமிழ்நாட்டையே அதிரவைத்த வழக்கு…யார் இந்த நிர்மலா தேவி? இந்த வழக்கில் என்ன நடந்தது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share