சாம்சங்கின் புதிய கேலக்சி A9 வரிசை டேப்கள்!

Published On:

| By Kavi

Samsung Galaxy Tab A9 and Galaxy Tab A9+ Series

ஸ்மார்ட் போன் தயாரிப்புக்கு பெயர்போன நிறுவனமான சாம்சங் தற்போது A9 வரிசையில் இரண்டு டேப் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை சாம்சங் கேலக்சி டேப் A9 மற்றும் சாம்சங் கேலக்சி டேப் A9+ ஆகும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மை பெற்ற நிறுவனங்களில் ஒன்று சாம்சங். ஸ்மார்ட் போன் டேப் என தொடர்ந்து படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிற சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடுதான் கேலக்சி A9 வரிசை டேப்.

சாம்சங் கேலக்சி டேப் A9 மற்றும் சாம்சங் கேலக்சி டேப் A9+ ஆகியவற்றின் அம்சங்களை பார்க்கலாம்:

சாம்சங் கேலக்சி டேப் A9

8.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் என்ற ஒரு வேரியண்டில் மட்டும் கிடைக்கிறது.
8MP பின்புற கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.
5100mAh பேட்டரி திறன் கொண்ட சாம்சங் கேலக்சி டேப் A9-ன் விலை ரூ.12,999ல் இருந்து தொடங்குகிறது.

Samsung Galaxy Tab A9 and Galaxy Tab A9+ Series

சாம்சங் கேலக்சி டேப் A9+
11 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் 128GB ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது.
8MP பின்புற கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவுடன் வருகிறது.
7040mAh பேட்டரி திறன் கொண்ட சாம்சங் கேலக்சி டேப் A9+-ன் விலை ரூ.18,999ல் இருந்து தொடங்குகிறது.

சாம்சங்கின் விருது பெற்ற பாதுகாப்பு தளமான சாங்சங் knox மூலமாக தரவுகள் பாதுகாப்பாக இருப்பதை கேலக்சி A9 வரிசை டேப் உறுதி செய்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அக்டோபர் 23 முதல் குறிப்பிட்ட சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த சாம்சங் கேலக்சி A9 வரிசை டேப்கள் சில்வர், நேவி, கிராபைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

-பவித்ரா பலராமன்

கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்களேன் இயக்குனர்களே?

துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் வெளியானது!

ஊரப்பாக்கத்தில் சோகம்: ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share