சாம்சங் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு : பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

Published On:

| By Kavi

சாம்சங் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. 
Samsung employees get pay hike

தென்கொரியா நாட்டை சேர்ந்த சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஏசி, டிவி, வாஷிங் மெஷின்கள், குளிர்சாதனப்பெட்டி மற்றும் கம்பிரசர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகத்திற்கு எதிராக ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. 

இந்தநிலையில் இன்று (மே 19) தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம், சாம்சங் நிறுவனத்துடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டி ஊதியம் உயர்த்தப்பட்டதாக தொழிலாளர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதில், “தொழிலாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டில் ரூ.9000/- 2026-2027 மற்றும் 2027-2028 ஆண்டுகளுக்கு தலா ரூ.4500/- வீதம் மூன்றாண்டு காலத்திற்கு ரூ.18000/- நேரடி சம்பள உயர்வு தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.

அனுபவத்தின் அடிப்படையிலான சிறப்பு ஊதிய உயர்வு மூன்றாண்டு காலங்களில் ரூ.1000/- முதல் ரூ.4000/- வரை தொழிலாளர்களுக்கு கிடைக்கும்.

ஒருமுறை சிறப்பு பதவி உயர்வாக 31.03.2025 தேதியில் 6 வருடங்கள் முறையான பணி நிறைவு செய்து பதவி உயர்வு கிடைக்காத தொழிலாளர்களுக்கு (ஆப்ரேட்டர் 1/2/3, டெக்னிசியன் 1/2/3) சிறப்பு பதவி உயர்வு அளிக்கப்படும்.

கூடுதல் விடுப்பு சலுகைகள், நீண்ட காலம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பணி விருது, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் வகையில் சாம்சங் நிறுவனத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார். 
Samsung employees get pay hike

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share