ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தா தியானம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா.
மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தீவிர சிகிச்சை மற்றும் ஒய்வுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகி இருக்கிறார்.
அவர், அவ்வப்போது ஈஷா யோகா மையம் சென்று வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஈஷா யோகா மையத்துக்கு சென்றுள்ளார் .
சத்குருவின் யோகா பயிற்சியில் பங்கேற்று தியானத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஈஷா யோகா மையத்தில் உள்ள கோசாலை உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சமந்தா, “நம்மில் பலர் நல்ல குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம்.
நம் வாழ்க்கையை ஒளிரச் செய்யும், சரியாக வழிநடத்தும் ஒருவரை கண்டால், அது நமக்கு கிடைத்த அரிய பாக்கியமாகும். அதுபோன்று ஞானம் வேண்டும் என்றால் அதனை இந்த உலகில் நீங்கள் தேட வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் நம் மீது திணிக்கப்படுகிறது. அவற்றில் எது சாதாரணமானது, எது அசாதாரணமானது என்று சொல்வது கடினம். அவற்றை நமக்கு கூறுபவர்கள் தான் குரு.
அதுபோன்று நாம் பலவற்றை தெரிந்துவைத்துக்கொள்வது மட்டும் போதாது… அதை செயல்படுத்துவதே உண்மையில் முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா