விஜய்க்கு வில்லியாகும் சமந்தா?

சினிமா

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் சமந்தா வில்லியாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

நடிகர் விஜய் உடன் ராஷ்மிகா மந்தானா பிரகாஷ் ராஜ், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தை முடித்துவிட்டு நடிகர் விஜய் தன்னுடைய 67வது படத்திற்காக ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் இணைகிறார்.

இந்நிலையில் படத்தில் சமந்தாவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடப்பதாக முன்பு தகவல் வெளியானது. தற்போது படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்காக நடிகை சமந்தாவை படக்குழு மீண்டும் அணுகியிருக்கிறது. ஏற்கனவே நடிகை சமந்தா விஜய்யுடன் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘கத்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மூன்று படங்களுமே வெற்றிகரமாக ஓடியதால் நடிகர் விஜய்க்கு சமந்தா ராசியான நடிகை என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் நிலவுகிறது.

லோகேஷ் கனகராஜ் படங்களில் எப்பொழுதுமே கதாநாயகர்களுக்கு இணையாகவே வில்லன் கதாபாத்திரமும் எழுதப்பட்டிருக்கும். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு சமந்தா வில்லி கதாபாத்திரம் என்ற தகவல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே நடிகை சமந்தா ‘தி பேமிலி மேன்’ சீரிஸிலும் சில படங்களிலும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து விருதுகளையும் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இந்தசூழலில் விஜய்க்கு சமந்தா வில்லியா அல்லது கதாநாயகியா என்பது குறித்துப் படக்குழு விரைவில் தகவல்களை அடுத்தடுத்து வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

ஆதிரா

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.