முகம் அழகாக ஜொலிக்க சமந்தா சொல்லும் 5 ஸ்கின் கேர் சீக்ரெட்ஸ்?

Published On:

| By Santhosh Raj Saravanan

Samantha 5 Skin Care Secrets for a Beautiful and Glowing Face

முகம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க சமந்தாவின் 5 சீக்ரெட் விஷயங்களை ஷேர் செய்துகொண்டுள்ளார். அவை என்னவென பார்க்கலாம்.

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, சீமராஜா, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். ஆட்டோ இம்யூன் இருந்தாலும் கூட சமந்தா தனது முக அழகை பராமரித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடி பாலோவர்களை வைத்துள்ள சமந்தா பளிச் சரும அழகுக்கு தந்த டிப்ஸைப் பார்ப்போம்.

ADVERTISEMENT

மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்

யூட்யூபில் வெளியான வீடியோ ஒன்றில் சமந்தாவிடம் உங்கள் முக அழகிற்கு என்ன செய்கிறீர்கள் ரகசியத்தை சொல்லுங்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா, ‘நீங்கள் சுவாசிக்கும் அதே காற்றை தான் நானும் சுவாசிக்கிறேன். நீங்கள் சாப்பிடும் உணவை தான் நானும் சாப்பிடுகிறேன். இதில் ரகசியம் ஏதுமில்லை, மனதை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் நமக்கு பிடித்ததையும் செய்து வந்தால் முகம் தானாகவே பளபளப்பாக மாறும். நேர்மறையான எண்ணங்கள் நம் முக அழகை பாதுகாக்கும்” என்று கூறினார்.

ADVERTISEMENT

சன்ஸ்கிரீன் (sunscreen)

சூரியனிடமிருந்து வெளிவரும் புற ஊதா கதர்களிடமிருந்து நம் சருமத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம், ஆனால், நாம் sunscreenபயன்படுத்துவதை மறந்து விடுகிறோம். வெளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் முகத்திற்கும் வெயில் படக்கூடிய இடங்களில் பயன்படுத்துவது மிக முக்கியம். நான் ஒரு நாள் கூட சன் ஸ்கிரீன் பயன்படுத்தாமல் வெளியே வருவதில்லை என்றார் சமந்தா.

ADVERTISEMENT

குறைவான மேக் கப்

சமந்தாவின் instagram பக்கத்தில் உள்ள பெரும்பாலான புகைப்படங்கள் மேக்அப் இல்லாமல் இயல்பான தோற்றத்திலேயே இருக்கிறார். இதன்மூலம் பெரும்பாலான நேரங்களில் அவர் மேக்அப் போடுவதில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார் என்பது தெரிகிறது. ஆன் ஸ்க்ரீனில் கூட சாதாரண மேக் அப்களிலே சமந்தா இருக்கிறார்.

நைட் கிரீம்

சமந்தாவின் முக்கியமான சீக்ரெட் முறை இதுதான். நைட் கிரீம் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் கொலாஜனை அதிகரிக்க உதவுகிறது. இது முகத்தை இயல்பாக வைக்க உதவுகிறது. சமந்தா ஒருபோதும் நைட் கிரீம் பயன்படுத்துவதை மறப்பதில்லை என அவரே கூறியிருக்கிறார்

ஆரோக்கியமான உணவு முறை

நாம் எவ்வளவுதான் மெனக்கெட்டு வெளிப்புற அழகை மேம்படுத்தினாலும் நாம் என்ன மாதிரியான உணவு முறை எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே நமக்கு நீண்ட கால சரும ஆரோக்கியம் இருக்கும். சமந்தா அரிதினும் அரிதாகவே எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடுவேன் என்று கூறுகிறார்.

இயற்கை காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக்கொள்ளவே விரும்புகிறேன் என்று கூறுகிறார். இவற்றையெல்லாம் ஃபாலோ செய்வதால்தான் சமந்தாவின் முகம் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே செல்கிறது. சமந்தாவின் இந்த 5 சீக்ரெட்ஸ்களை நீங்களும் ஃபாலோ செய்தால் உங்கள் சருமமும் ஜொலிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share