தென்னிந்தியர்கள் கருப்பர்கள்: சர்ச்சையை கிளப்பிய சாம் பிட்ரோடா ராஜிமானா!

Published On:

| By Selvam

இந்தியர்கள் நிறம் குறித்து சாம் பிட்ரோடா பேசியது சர்ச்சையான நிலையில், ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியை இன்று (மே 8) ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் சாம் பிட்ரோடா, தி ஸ்டேட்ஸ்மேன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “உலகில் ஜனநாயகத்திற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம்.

கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்கள் போலவும் இருப்பார்கள். இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. இந்தியர்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே” என்று அவர் கூறியிருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக தெலங்கானா பொதுக்கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, “சாம் பிட்ரோடா கூறிய கருத்தால் நான் இன்று மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்த இனவாத மனநிலையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

தமிழ் கலாசாரம் பற்றி பேசும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்காக காங்கிரஸுடன் உறவை முறிக்கத் தயாரா? அதற்கான தைரியம் வருமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில், சாம் பிட்ரோடா தனது ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். அவரது முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காங்கிரஸ் உறவை முறிக்க தயாரா?: சாம் பிட்ரோடா கருத்தை குறிப்பிட்டு ஸ்டாலினுக்கு மோடி கேள்வி!

ராகுல் பேச்சில் 103 முறை அதானி, 30 முறை அம்பானி … மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share