தனுஷ் நடித்த முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. பிறகு தினா, வித்யாசாகர், பரத்வாஜ், தேவா, இளையராஜா, டி.இமான், குருகிரண், ஜி.வி.பிரகாஷ்குமார், தேவிஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி, மணி சர்மா, அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான், கிப்ரான், ஹாரிஸ் ஜெயராஜ், ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், தர்புகா சிவா, விவேக் – மெர்வின் என்று பல இசையமைப்பாளர்களோடு பயணித்து வருகிறார் தனுஷ். sam cs joined hands with biggie dhanush
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘இட்லிக்கடை’ மற்றும் ‘டி 54’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படங்கள் தயாராகி வருகின்றன.
இதையடுத்து மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் என்று அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.
இதற்கு நடுவே ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கவிருக்கிற படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பதாக ஒரு தகவல் திரையுலகில் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்திய பேட்டியொன்றில் அத்தகவல் உண்மை என்பது தெரிய வந்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், முதன்முறையாக தனுஷ் படத்தில் இசையமைப்பது மகிழ்ச்சி தருவதாகக் கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் விஜய், சிவகார்த்திகேயனுக்கு இணையாக தனுஷ் படங்களிலும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தைச் சட்டென்று கவரும் வகையில் உள்ளன. அவரது படங்களின் பாடல்களே அதற்கான சான்றுகள். அந்த வகையில், சாம் சி.எஸ்ஸின் ‘மீட்டரை’ எகிற வைக்கிற படமாக ‘இப்படம்’ அமையலாம்.
திரையுலகில் தனக்கான உயரம் ‘சரியான அளவில்’ வாய்க்கவில்லை என்ற தொனியில் அமைந்த சாம் சி.எஸ்ஸின் சமீபகால வருத்தங்களை அறவே துடைத்தொழிக்கிற வாய்ப்பாகவும் இது அமையக்கூடும்..!
