”ரஜினிகாந்த், சிரஞ்சீவி படங்களை நாங்கள் பார்க்கிறோம், ஆனால் அவர்களின் ரசிகர்கள் எங்கள் படங்களைப் பார்ப்பதில்லை” என சல்மான் கான் வேதனை தெரிவித்துள்ளார். Salman Khan’s anger over Rajini fans!
இந்தியாவில் 2015ஆம் ஆண்டு வெளியான பிரபாஸின் பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியத் திரைப்பட அகராதியில் ’பான்-இந்தியா’ என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. மொழித் தடைகளைத் தாண்டி, நாடு முழுவதும் ஒரு படத்தை கொண்டு சேர்க்கவும், வசூல் குவிக்கவும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் தென்னிந்திய படங்களுக்கு மட்டுமே பெரும்பாலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் இதுவரை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைஉள்ளது.
இந்த நிலையில் தமிழ் திரையுலக இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் பண்டிகையொட்டி வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் மற்றும் ஷர்மன் ஜோஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதனையடுத்து மும்பையில் இன்று (மார்ச் 28) நடந்த அப்படத்தின் ப்ரொமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் கானிடம், ’பாகுபலி, எந்திரன் 2.0, கேஜிஎஃப் போன்ற தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடப் படங்களைப் போல இந்தி படங்களால் இந்தியா முழுவதும் ஏன் வசூல் குவிக்க முடியவில்லை’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்கள் தியேட்டருக்குச் செல்வதில்லை! Salman Khan’s anger over Rajini fans!
அதற்கு அவர், “ரஜினிகாந்த் சார், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால், எங்கள் படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை.
அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் ‘பாய்.. பாய்..’ என்று ரசிகர்கள் என்னை அழைப்பார்கள். ஆனால், தியேட்டருக்குச் செல்வதில்லை. நாங்கள் அவர்களை இங்கு ஏற்றுக்கொண்டது போல், அவர்கள் எங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
சரியான ஸ்கிரிப்ட் தேவை! Salman Khan’s anger over Rajini fans!
தொடர்ந்து அவரிடம், ”தென் மாநிலங்களில் படங்களை பிரபலப்படுத்துவதற்காக, பாலிவுட் படங்களில் ஏன் தென்னிந்திய நட்சத்திர நடிகர்களை சேர்ப்பதில்லை’ என்ற கேள்விக்கு, “அப்படி நடக்க சரியான ஸ்கிரிப்ட் தேவை. அதே போன்று பட்ஜெட் கட்டுப்பாடும் மிகப்பெரிய தடையாக உள்ளது. அனைத்து திரையுலகைச் சேர்ந்த நட்சத்திர நடிகர்களும் ஒரு படத்தில் நடிப்பது என்பது ஒரு பெரிய பொறுப்பு.
தற்போது நிதேஷ் திவாரி இயக்கி வரும் ராமாயணத்தில் ரன்பீர் கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் மற்றும் தெலுங்கு நடிகை சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்” என்று சல்மான் கான் தெரிவித்தார்.