சிரஞ்சீவி நயன்தாரா படத்தில் சல்மான்கான்

Published On:

| By admin

மோகன்லால் மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மலையாள படம் லூசிபர்.

குருவுக்கு செய்யும் நன்றிக்கடன், குருதட்சணை எனக் கூறி பிரித்விராஜ் இயக்கிய படம் கேரள பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வெற்றி அடைந்தது. இந்தப்படத்தை இப்போது தெலுங்கிலும் தயாரிக்கின்றனர்.

ADVERTISEMENT

காட்ஃபாதர் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப்படத்தில் மோகன்லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். மோகன்ராஜா இயக்குகிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் விட்டுவிட்டு நடந்துவருகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்துவருகிறது. அதற்குக் காரணம் படத்தில் இந்திநடிகர் சல்மான்கான் நடிப்பதால் என்கிறது படக்குழு.

ADVERTISEMENT

லூசிபர் படத்தில் மோகன்லாலின் நண்பராக ஒரு முக்கிய வேடத்தில் பிரித்விராஜ் நடித்திருந்தார். அந்த வேடம் படத்திற்கு முக்கியமானது என்றாலும் மோகன்லால் அளவுக்கு அழுத்தமும், முக்கியத்துவமும் இருக்காது. மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள பிருத்விராஜ் அந்த வேடத்தில் நடிக்க காரணம் படத்தின் இயக்குநர் என்பதுடன் மோகன்லாலை அவர் தனது குருவாக மதிப்பதும் ஒரு காரணம்.

அதே வேடத்தில் தெலுங்கு பதிப்பில் சல்மான்கான் நடிக்கிறார். சல்மான்கான் அவர்
நடித்தால் இந்தப்படம் தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் பெரிய வரவேற்பு பெறும் என்று கூறி அவரை நடிக்க சம்மதிக்க வைத்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக சல்மான்கான் அந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இதனால் படத்தின் வணிக மதிப்பு உயர்ந்திருக்கிறது.

ADVERTISEMENT

சல்மான்கான் நடிப்பதால் தெலுங்குப்படமாக தொடங்கப்பட்ட காட்பாதர் அகில இந்தியப் படமாக மாறியிருக்கிறது.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share