‘பப்பா, கட்டப்பா’- சத்தியராஜை தந்தையிடம் அறிமுகப்படுத்திய சல்மான்கான்

Published On:

| By Kumaresan M

நடிகர் சத்தியராஜ் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் என்ற படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது, செய்தியாளர் சந்திப்பு மும்பையில் நடந்தது.

சத்தியராஜூம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சல்மானின் தந்தையும் கதாசிரியருமான சலீமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். Salman introduced Sathyaraj to papa

அப்போது, சத்தியராஜை தந்தையிடம் அழைத்து சென்ற சல்மான், பப்பா, கட்டப்பா என்று கூறி அறிமுகப்படுத்தி வைத்தார். இதனால், சத்தியராஜ் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து பேசிய சத்தியராஜ், ‘சலீம் சாரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தனது கதையால் எத்தனையோ ஹீரோ, ஹீரோக்களை உருவாக்கிய ஹீரோ சலீம் சார். கல்லூரி காலத்தில் இருந்து அவரை சந்திக்க வேண்டுமென்ற ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. சல்மானுடன் நடிப்பதை விட, அவரின் தந்தையை சந்தித்ததும், எனது கேரக்டரின் பெயரை கூறி அறிமுகப்படுத்தியதும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

47 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கிறேன். வில்லனாகத்தான் முதலில் நடித்தேன். 258 படங்களில் நடித்திருக்கிறேன். முருகதாஸ் என்னை மீண்டும் வில்லனாக கொண்டு வந்துள்ளார். திருநங்கை வேடத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறேன்.

சிக்கந்தர் படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. சல்மான் , ராஷ்மிகா மந்தனா, சுனில் ஷெட்டி, சத்தியராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். Salman introduced Sathyaraj to papa

சமீப காலங்களில் தென்னிந்திய படங்கள் வசூலில் சக்கை போடு போடுகின்றன. ஆனால், பாலிவுட் படங்கள் அந்த அளவுக்கு வசூலிப்பதில்லை என்கிற நிலை காணப்படுகிறது. சிக்கந்தர் அந்த குறையை தீர்க்கும் என்று பாலிவுட் நம்புகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share