Video: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரெட் அல்வா… மனசும், வயிறும் குளுந்து போச்சு!

Published On:

| By Manjula

திமுக இளைஞரணி மாநாட்டில் வழங்கப்பட்ட சாப்பாடு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மிகப் பிரமாண்டமான முறையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு இன்று (ஜனவரி 21) நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதில் காலை உணவு 5000 பேருக்கு வழங்கப்பட்டு இருந்தது. அதோடு அனைத்து இருக்கைகளிலும் மஞ்சப்பையில் வைத்து ஸ்நாக்ஸ் வகைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

காலை உணவில் சிகப்பு அரிசி இட்லி, முடக்கத்தான் தோசை, பூரி, பொங்கல், தக்காளி சட்னி, சாம்பார், கார சட்னி, பூரி மசாலா, வடை, கருப்பட்டி அல்வா ஆகியவை இடம் பெற்றன.

இந்த நிலையில் மாநாட்டில் வழங்கப்பட்ட மதிய உணவு தற்போது தொண்டர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதற்காக திருச்சி ஹக்கீம் பாய் குழுவினர் சார்பில் சமையல் மற்றும் கேட்டரிங் பணிக்காக 5௦௦௦ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கரூரில் இருந்து இதற்காக சுமார் 40,000 கிலோ ஆட்டுக்கறி கொண்டு வரப்பட்டது. அதேபோல 2௦,௦௦௦ கிலோ சிக்கனும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அசைவ பிரியர்களுக்கு சீரகசம்பா அரிசியை வைத்து திண்டுக்கல் ஸ்டைலில் தயாரிக்கப்பட்ட மட்டன் பிரியாணி, சிக்கன் 65 , எண்ணெய் கத்தரிக்காய், பிரெட் அல்வா ஆகியவை வழங்கப்பட்டன.

சைவ விரும்பிகளுக்கு வெஜ் பிரியாணி, கோபி 65, தயிர் சாதம், எண்ணெய் கத்தரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டன.

மதிய உணவு குறித்து தொண்டர்கள் அளித்த பேட்டியில், ”சாப்பாடுக்கு எந்த கொறையும் இல்ல. சாப்பாடு, தண்ணீர், ரெஸ்ட் ரூம்ன்னு எல்லா வசதிகளும் நல்லா இருக்கு.

பிரெட் அல்வா ரொம்ப நல்லா இருந்தது. எல்லா விஷயத்தையும் பாத்துப்பாத்து செஞ்சுருக்காங்க. எங்கே பாத்தாலும் சுத்தமா இருக்கு,” என பாராட்டுகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆப்கானில் இந்திய விமானம் விபத்தில் சிக்கியதா? : அமைச்சகம் பதில்!

அயோத்தி – ஸ்ரீரங்கம் – ராமேஸ்வரம்:  மோடி புதுப்பித்த புராண முடிச்சு! 

சாப்பாடு எப்படி இருந்தது? திமுக தொண்டர்கள் பதில் | DMK Salem Maanadu | Udhayanidhi | MK Stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share