31 மாதங்களுக்குப் பிறகு சேலம் – சென்னை விமான சேவை!

By Minnambalam

|

Published on 30 Oct 2023, 8:17 AM

Salem-Chennai Flight Service Resumed

31 மாதங்களுக்கு பிறகு சேலம், சென்னை விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. உதான் திட்டத்தில் ட்ரூஜெட் நிறுவனம் மூலம் சேலம் – சென்னை விமான சேவை கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 2021ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதையடுத்து சேலத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவை இயக்க வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையொட்டி 31 மாதங்களுக்கு பிறகு சேலம் சென்னை விமான சேவை நேற்று (அக்டோபர் 29) தொடங்கியது. சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, திரைப்பட நடிகை நமீதா, அவரது கணவர் உள்பட 43 பேர் வந்தனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கார்மேகம் மற்றும் எம்.பி. பார்த்தீபன் மலர் மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

ADVERTISEMENT

பின்னர் சேலத்தில் இருந்து மீண்டும் சென்னை திரும்பிய விமானத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர்.

இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் எனவும் அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50 மணிக்கு புறப்பட்டு 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 16ஆம் தேதி பெங்களூரு – சேலம் – கொச்சின் வழித்தடத்தில் விமான சேவை தொடங்கி இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : CSIR-CEERI நிறுவனத்தில் பணி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel