கே.ஜி.எஃப் படத்தை இயக்கியதின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள படம் சலார். இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
First Single from #SalaarCeaseFire out tomorrow 🎵#SalaarFirstSingle: #Sooreede (Telugu), #SoorajHiChhaonBanke (Hindi), #AakaashaGadiya (Kannada), #Suryangam (Malayalam), #AagaasaSooriyan (Tamil).
Music by @RaviBasrur 🎶#Salaar #Prabhas #PrashanthNeel @PrithviOfficial… pic.twitter.com/Wy0LwfE5GN
— Hombale Films (@hombalefilms) December 12, 2023
சமீபத்தில் இந்த படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சலார் படத்தின் போஸ்டர்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் தற்போது சலார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சலார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் தமிழ் வெர்ஷனுக்கு “ஆகாச சூரியன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் நாளை (டிசம்பர் 13) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி. எப் படத்திற்கு இசையமைத்த ரவி பசூர் தான் சலார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
