பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மும்பை நகரில் பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். 11-வது தளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிபை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சைஃப் அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்து கொண்டார். தற்போது அவர் உடல்நலன் தேறி வருகிறார். மருத்துவமனையில் இருந்து வீடும் திரும்பியுள்ளார். மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து உடலில் இருந்த கத்தி முனையை அகற்றினர். இந்த கத்தி முனை 2.5 இஞ்ச் நீளம் இருந்தது.
சைஃப் அலி கான் நிவா புபா ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துள்ளார். இது 35 லட்சம் மதிப்பு கொண்டது. உடனடியாக, சைஃப் அலிகானுக்கு 25 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சைஃப் அலி தாக்கப்பட்டதற்கும் மும்பை நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு இல்லை என்று மகராஷ்டிரா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஆனால், அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார். கத்திக்குத்து சம்பவம் நடந்து 50 மணி நேரமாகியும் சம்பவத்தில் தொடர்புடையவர் கைது செய்யப்படவில்லை.
பாந்திராவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11வது மாடியில் சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கிறார். கடந்த 16 ஆம் தேதி இரவு 2.30 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டார். தாக்கியவர் அடுக்குமாடி குடியிருப்பின் தீ பிடித்தால் தப்பிக்கும் வழி மூலம் 11வது மாடிக்கு சென்றதாக தெரிகிறது. சைஃப் அலிகானை தாக்கி விட்டு, அதே வழியாக தப்பியும் சென்றுள்ளார்.
சைஃப் அலி கானின் வீட்டு பணியாளர்களுக்கும் தாக்குதல் நடத்தியவர்ளுக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்