டாக்டர் ராமதாஸுடன் அதிமுக சீனியர் திடீர் சந்திப்பு: ஏன்?

Published On:

| By Aara

சென்னை மாநகரின் முன்னாள் மேயரும் அதிமுகவின் மூத்த தலைவருமான சைதை துரைசாமி, இன்று ஏப்ரல் 13 தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசி உள்ளார். அதிமுக மற்றும் பாமக இரு கட்சிகளிலும் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சைதை துரைசாமி வெளியிட்ட அறிக்கையில்

“எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தங்களை கடுமையாக விமர்சித்த தலைவர்களை கூட இணக்கத்தோடு மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொண்டார்கள். அது போன்ற ஒரு இணக்கத்தை தற்போதும் பின்பற்ற வேண்டும். Saidai Duraisamy sudden meeting with Dr. Ramadoss Why?

மேலும் அதிமுகவுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பலன் தந்தது. எம்ஜிஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டார். இந்த அணுகுமுறைகளை கடைபிடித்தால் கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லலாம்.

பாரதிய ஜனதா கட்சியோடு இணைந்து வளமான கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். எம்ஜிஆரை முதன்மைப்படுத்துங்கள், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகளையும் திமுக எதிர்ப்பாளர்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள்” என்று வலியுறுத்தியிருந்தார் சைதை துரைசாமி.

இந்த நிலையில் இன்று டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சைதை துரைசாமி சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டது.

தைலாபுரம் தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சைதை துரைசாமி சந்திப்பு பற்றி நிருபர்களிடம் பேசிய போது, Saidai Duraisamy sudden meeting with Dr. Ramadoss Why?

“மனிதநேய அறக்கட்டளை சார்பாக பயிற்சி பெற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எம்பிசி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பெற்றார். அதற்காக டாக்டர் ராமதாஸ் அவர்கள் எனக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார். அவருடைய பாராட்டுக்கு நன்றி சொல்லிவிட்டு போகலாம் என நேரில் வந்தேன்” என்றார். அரசியல் பேசினீர்களா என்ற கேள்விக்கு, ப்ளீஸ் என்று சொல்லிவிட்டு சென்றார் சைதை துரைசாமி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share