டி.என்.பி.எல் ஏல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 22 லட்சத்திற்கு சாய் கிஷோரை திருப்பூர் தமிழன்ஸ் அணியும், சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோலாஸ் அணியும் வாங்கியுள்ளது.
நாடு முழுவது ஐபிஎல் ரசிகர்களால் கொண்டாடப்படுவது போல, டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தாண்டு (2024) நடைபெற உள்ள 8வது சீஸனுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த டி.என்.பி.எல் ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய்க்குள் 8 அணிகளும் குறைந்தபட்சம் 16 வீரர்களையும், அதிகபட்சமாக 20 வீரர்களையும் தங்கள் அணியில் ஏலம் எடுக்க முடியும். ஏலத்தில் மொத்தம் 675 வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில் 8 அணிகள் சார்பாக 62 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதன்படி இன்று காலை துவங்கிய ஏலம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டி.என்.பி.எல் ஏல வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூபாய் 22 லட்சத்திற்கு திருப்பூர் தமிழன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார் சாய் கிஷோர்.
அவரைத்தொடர்ந்து யார்க்கர் மன்னன் நடராஜனை ரூபாய் 11.25 லட்சத்திற்கு வாங்கியுள்ளது திருப்பூர் தமிழன்ஸ்.
சாய் கிஷோருக்கு போட்டியாக சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி ரூபாய் 22 லட்சத்திற்கு வாங்கியது.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் வாரியர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ரூ.10.5 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
ஹரிஷ் குமாரை ரூ.15.4 லட்சத்திற்கும், விவேக்கை ரூ. 11 லட்சத்துக்கும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வாங்கியுள்ளது.
அபிஷேக் தன்வாரை ரூ. 12.2 லட்சத்துக்கும், பெரியசாமியை ரூ.8.8 லட்சத்திற்கும், வாங்கியுள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சுப முகூர்த்தம் எதிரொலி : தங்கம் விலை அதிரடி உயர்வு!
”ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை” : நடிகர் விஷால்