கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசிப் பணியாரம்

Published On:

| By Balaji

பஜ்ஜி, வடை, போண்டா போன்ற எண்ணெய் அதிகம் பிடிக்கும் ஸ்நாக்ஸ் வகைகளைவிட அதிக எண்ணெய் தேவைப்படாத குழிப்பணியாரத்தைப் பலரும் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் குறைந்த நேரத்தில் எளிதாக செய்யக்கூடிய இந்த ஜவ்வரிசி பணியாரமும் அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.

**என்ன தேவை?**

ADVERTISEMENT

இட்லி அரிசி – ஒன்றரை கப்

மாவு ஜவ்வரிசி – ஒரு கப்

ADVERTISEMENT

பச்சை மிளகாய் – 4

சின்ன வெங்காயம் – 10

ADVERTISEMENT

நன்கு புளித்த தயிர் – ஒரு கப்

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரிலும், ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் தயிரிலும் ஊறவைக்கவும். முதலில் இட்லி அரிசியை அரைத்தெடுத்து, பின்னர் ஜவ்வரிசியை அரைத்தெடுக்கவும். இவற்றை உப்பு, சமையல் சோடா சேர்த்து ஒன்றாகக் கலந்துவைக்கவும். இவற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாகி நறுக்கிச் சேர்க்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பிவிடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்து சூடாகப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: கோதுமை பேரீச்சைப் பணியாரம்](https://minnambalam.com/public/2021/06/18/1/wheat-dates-paniyaram)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share