2025-ம் ஆண்டு உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. உலகளவில் குற்றங்களின் நிலை, பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் முதலானவற்றை மதிப்பிட்டு, பாதுகாப்பான நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியலை நம்பியோ ஆய்வறிக்கை வெளிட்டுள்ளது. Safest countries in the world 2025
நம்பியோ 2025 ஆய்வின்படி, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அன்டோரா நாடுதான் உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண் 84.7 என்ற அளவில் குறிப்பிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் 84.5 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், 84.2 மதிப்பெண்களுடன் கத்தார் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில், 55.7 மதிப்பெண்களுடன் 66-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. பாகிஸ்தான் இந்த பட்டியலில் 56.3 மதிப்பெண்களுடன் 65-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா 50.8 மதிப்பெண் பெற்று, 89-வது இடத்தில் உள்ளது.
பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் வெனிசுலா 19.3 மதிப்பெண்களுடன் மிகவும் ஆபத்தான நாடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான பாதுகாப்பு தர வரிசைகளைக் கொண்ட பிற நாடுகளில் பப்புவா நியூ கினியா (19.7), ஹைதி (21.1), ஆப்கானிஸ்தான் (24.9), மற்றும் தென்னாப்பிரிக்கா (25.3) ஆகியவை அடங்கும். இந்த நாடுகள் அதிக குற்ற விகிதங்கள், அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் பாதுகாப்பு அபாயங்களுடன் தொடர்ந்து போராடி வருகின்றன.
இதற்கிடையே, வன்முறை குற்றங்களில் சரிவு இருந்தபோதிலும், அமெரிக்கா பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இருந்து வெகு தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. Safest countries in the world 2025