இந்தி தேசிய மொழியா? – நிதிஷ்குமாருக்கு சத்குரு பதில்!

Published On:

| By Selvam

தேசிய மொழியான இந்தியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்தியில் பேசியுள்ளார். அப்போது திமுக பொருளாளரும், மக்களவை நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கு மறுப்பு தெரிவித்த நிதிஷ்குமார், “தேசிய மொழியான இந்தியை அனைவரும் கற்க வேண்டும். ஆங்கிலம் என்பது அந்நிய மொழி. நாம் எப்போதோ ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டோம்” என்று பேசியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணி கூட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் மிக முக்கியமான பேசுபொருளாக மாறியது.

நிதிஷ்குமாரின் இந்த பேச்சுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மதிப்பிற்குரிய நிதிஷ்குமார் அவர்களே, ஹிந்துஸ்தான் என்பது இமயமலைக்கும் இந்து சகாராவுக்கும் இடையில் உள்ள நிலம் அல்லது இந்துக்களின் நிலம். இந்தி மொழியின் நிலம் அல்ல.

ADVERTISEMENT

நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து மொழிகளும் ஒரே அந்தஸ்தை பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் தங்கள் சொந்த மொழி, இலக்கியம், கலாச்சாரத்துடன் இயங்குவதால் இதுபோன்ற வெற்று கருத்துக்களை தயவு செய்து தவிர்க்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கடும் எதிர்ப்பால் பணிந்தது மத்திய அரசு: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை!

பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share