அமித் ஷாவுக்கு ஆதியோகி சிலை பரிசளித்த சத்குரு

Published On:

| By christopher

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குருவை டெல்லியில் நேற்று (ஜனவரி 4) சத்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சத்குரு ஜியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பில் ஆன்மீகம் மற்றும் சமூகங்களை மாற்றியமைப்பதில் அதன் பங்கு குறித்து விவாதித்தோம்” என குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதற்கு எக்ஸ் தள பக்கத்திலேயே பதிலளித்துள்ள சத்குரு, ”இந்தியாவின் உள்துறை அமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது தேசத்தின் நாகரீக அம்சங்களில் அவரது ஈடுபாடும் ஆர்வமும் போற்றத்தக்கது” என பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஆதியோகி சிலையை அமித்ஷாவுக்கு சத்குரு பரிசாக வழங்கினார்.

ADVERTISEMENT

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு, பருவநிலை மாற்றத்திற்கு எதிராக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நதிகளுக்கான பேரணி, காவிரி அழைப்பு மற்றும் மண்ணைக் காப்பாற்றுவதற்கான பயணம் போன்ற பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

இவரது ஆன்மீகம் மற்றும் மனிதாபிமான சேவை மீதான பங்களிப்புகளுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருதை கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பிறந்தநாளில் தற்கொலை செய்துகொண்ட திருப்பூர் கல்லூரி மாணவர்: என்ன காரணம்?

ரூ.120 கோடி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பிணமாக மீட்பு!

டாப் 10 நியூஸ் : இந்து மக்கள் கட்சி உண்ணாவிரத போராட்டம் முதல் இறுதிக்கட்டத்தில் சிட்னி டெஸ்ட் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share