த. வெ.க.கட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி சினியுலகம் யூடியூப்புக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது, விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது,
‘விஜய்யோட பெர்சனல் கேரக்டர் என்ன அப்படினா… விஜய் ஒரு படத்துல பேசியிருப்பார். அவர் ஒரு முடிவு செய்துட்டார்னா மாத்தவே முடியாது.ஜெயிக்குற வரைக்கும் விடமாட்டார். அவ்வளவு உறுதியாக நிற்பார். சினிமாவில் ஆரம்ப கால கட்டத்துல நான் விஜய் கூட இருந்தேன். அப்புறம் ஜெயிக்கனும்னு வெறியோட உழைச்சார். சினிமாவுல வேகம் வெறியோடு ஜெயிச்சு வந்துட்டார். SAC reveals vijay’s character
ஆனால் , சினிமா குறுகிய வட்டம். சினிமாவுல நாம சம்பாதிக்கிறோம். கொஞ்சம் பேருக்கு உதவுறோம். படிக்க வைக்கிறோம். அரசியல்னு போகிற போது, நாட்டின் மீது பற்று இருந்தால்தான் அந்த துறையை தேர்வு செய்ய முடியும். ஒரு நடிகனாக இருந்து சம்பாதிப்பதை விட நாட்டை உயர்த்தனும் தமிழ்நாட்டை உயர்த்தனும் அப்படிங்குற ஒரு அக்கறை அவருக்கு இருக்கிறது.SAC reveals vijay’s character
ஒரு அப்பாவாக இதை நான் மகிழ்ச்சியாக, பெருமையாகவே பார்க்கிறேன். இளைய தளபதியா இருந்த அவரை தளபதியாக மாறி உலகம் முழுக்கவுள்ள அத்தனை தமிழர்களும் அவரை கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு இயக்குநராக இதை நான் பெருமையாகவே பார்க்கிறேன். விஜயகாந்த் வளர்ச்சியை பார்த்து நான் பெருமைப்பட்டேன். சிம்ரன், ரஹ்மான் இவங்கள்ள வளர்ச்சியடையறதை பார்த்து சந்தோஷப்பட்டேன்.SAC reveals vijay’s character
ஒரு காலத்துல விஜய் சினிமாவுக்குள் வரும்போது என்னோட மகன் விஜய்னு சொன்னாங்க. இப்போது, விஜய்யோட அப்பா போறாங்க. அம்மா போறாங்கனுதானே பேசுறாங்க. இதுதானே எனக்கு கிடைத்த பெருமை. எல்லா குழந்தைகளும் அந்த பெருமையை பெற்றோருக்கு கொடுப்பதில்லையே. அரசியல் என்பது கடல் மாதிரி. அதுல நீந்துறது கஷ்டம். SAC reveals vijay’s character
ஆனால், விஜய் அந்த கடல்ல நீச்சலடிக்க ஆசைப்படுகிறார். ஐய்யய்யோ அரசியல் கஷ்டம்னு நினைச்சிருந்தா அரசியலுக்குள்ள வந்துருக்க மாட்டார். அரசியலையும் மக்களையும் நேசிச்சதால், அங்கே போயிருக்காரு. பிரச்னைகள் இருக்கும் என்று அவருக்கு தெரியும். அதை எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை கண்டிப்பாக விஜய்யை ஜெயிக்க வைக்கும” என்றார்.
அதே வேளையில், நடிகர் விஜய்யின் மகன் இயக்குநராவது குறித்து ஏ.எஸ்.சி கூறியதாவது,’ நான் கூட ஜேசனிடம் அப்பா மாதிரி ஹீரோ ஆயிடுப்பானுதான் சொன்னேன். இல்ல தாத்தா, இல்ல தாத்தா, டைரக்டரா இருக்குறதுல ஒரு த்ரில் இருக்கிறது என்று சொன்னார். விஜய் நடிகராக ஆசைப்பட்டார். அதை, நான் செய்தேன். அதே போல, என் பேரன் அவன் விருப்பப்படி இயக்குநராக ஆசைப்படுகிறான். அதையும் எல்லோருமே ஏற்றுக் கொண்டோம் ‘என்று பதில் அளித்தார்.