கிச்சன் கீர்த்தனா: சப்ஜா விதை ரோஸ் மில்க்!

Published On:

| By admin

தண்ணீர் குடிப்பதில் தொடங்கி, உண்ணும் உணவு வரை அனைத்தையும், கோடைக்கேற்ற வகையில் நெறிப்படுத்தித் கொண்டால் கோடையைக் குளுமையாக்கிக்கொள்ள முடியும். எப்போதும் எதையாவது கொரிப்பதைக் கட்டுப்படுத்தும் இந்த சப்ஜா விதை ரோஸ் மில்க், மனநிலையை உற்சாகப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும்.

என்ன தேவை?

  • குளிரவைத்த பால் – 2 கப்
  • தரமான பன்னீர் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • ஃபுட் கலர் பிங்க் (தேவைப்பட்டால்) – 1 அல்லது 2 துளிகள்
  • பன்னீர் ரோஜா இதழ்கள் (நன்கு கழுவியது) – சிறிதளவு
  • சப்ஜா விதைகள் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

சப்ஜா விதைகளை, கால் கப் தண்ணீரில் 10, 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். விதைகள் நன்றாக ஊறி, பெரியதாக உப்பியிருக்கும். சர்க்கரை, பால், பன்னீர்… மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கலந்து வைக்கவும். (விருப்பப்பட்டால் பிங்க் ஃபுட் கலர் ஓரிரு துளிகள் சேர்க்கலாம்). உயரமான கிளாஸ்களில் ரோஸ் மில்க்கை ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மேலே சப்ஜா விதைகள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share