தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசனுக்கு இன்று (ஜூலை 17) பிறந்த நாள். இதை ஒட்டி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு திமுக பிரமுகர்களும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் சபரீசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் – துர்கா தம்பதியிடம் ஆசி பெற்ற சபரீசனை, அதன் பின் அமைச்சர்கள், மாசெக்கள், நண்பர்கள் என பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, தாமோ அன்பரசன், சி,வி, கணேசன், மதுரை மூர்த்தி, சக்கரபாணி, ராஜ கண்ணப்பன், மதிவேந்தன் உள்ளிட்ட பல அமைச்சர்கள், மாசெக்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கௌதம சிகாமணி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் புதிய திராவிட கழகத்தின் ராஜ் கவுண்டரும் வாழ்த்து தெரிவித்தார்.
சபரீசனோடு இன்று பிறந்தநாள் காணும் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையும் சபரீசனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரிடம் இருந்து வாழ்த்தை பெற்றுக் கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வு முதல் கூட்டணி கட்சிகளுடனான சுமுகமான பணி, தேர்தல் பரப்புரை என அனைத்தையும் திட்டமிட்டு ஒருங்கிணைத்தது சபரீசனின் PEN நிறுவனம் தான், இதே போல வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவிற்கான உத்தி வகுக்கும் பணிகளை ஏற்கனவே சபரீசனின் PEN தொடங்கிவிட்டது.
இந்நிலையில் சபரீசனின் பிறந்தநாளுக்கு பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
– வேந்தன்
திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரா நீதிபதி சந்துரு? : அண்ணாமலை கேள்வி!
டிஜிட்டல் திண்ணை: 10 அமைச்சர்களை வீட்டுக்கு அழைத்த ஸ்டாலின் -கேபினட் மாற்றமா?