சபரிமலை ஐயப்பன் கோவிலில் புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று நடைதிறக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை தவிர மாதப் பிறப்பு நாட்களில் பூஜைக்காக ஐந்து நாட்கள் நடை திறக்கப்படும். இந்தநிலையில் புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5.40 மணி முதல் 6.15 மணி வரை தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது.
இதற்காக பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களிலிருந்து நெற்கதிர் கட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நெற்கதிர் கட்டுகளுக்கு பூஜை செய்த பிறகு பிரசாதமாக வழங்கப்படும். விவசாய அபிவிருத்திக்காக இந்த பூஜையானது நடைபெறுகிறது. இந்த பூஜைக்கு பின்பு கோவிலானது இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலானது ஆகஸ்ட் 16-ஆம் தேதி திறக்கப்படும். ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
செல்வம்
ஹாக்கி: பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?
