சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மகர மற்றும் மண்டல விளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூஜைகளில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
அந்தவகையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்த உள்ளார். இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை (ஜூலை 16) முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
கடைசி நாளான ஜூலை 20-ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் பாடப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’ஃபயர்’ படம்…. ரச்சிதாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா? இயக்குனர் விளக்கம்!