எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகும் படம் தேசிங்கு ராஜா 2. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 27) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு, நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழா மேடையில் பேசிய இயக்குனரும் நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர்,
“சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அதுவும் வெளியாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே பார்த்துவிட்டு, அந்த இயக்குனருக்கு போன் செய்து அவரை மிகவும் பாராட்டினேன்.
படத்தின் முதல் பாதி சூப்பர் சார், ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவரிடம் கூறிக் கொண்டிருந்தேன்.
அதன் பிறகு படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் சரியில்லை சார் என்று நான் சொன்னவுடன் அந்த இயக்குனர் சார் “நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்” என்று பதில் சொன்னார்.
#Leo is arguably Lokesh's worst film to date.
Despite being inspired by a simple film, the delivery was incompetent. #LCU ellam 😭— Richie (@peacebroxyz) January 28, 2024
நான் மீண்டும் இரண்டாம் பாதி சரியில்லை நீங்கள் படத்தில் காட்டியது போல் அந்த குறிப்பிட்ட மதத்தில் அப்படிப்பட்ட எந்த விஷயங்களையும் பின்பற்ற மாட்டார்கள்.
அதுவும் ஒரு தகப்பனே பிள்ளையை கொல்வது போன்றெல்லாம் இருக்கிறது என்று நான் சொன்னவுடன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் சார், அப்புறம் உங்களுக்கு போன் செய்கிறேன் என்று கூறிவிட்டு அவர் போனை வைத்து விட்டார்.
ஆனால் அதன் பிறகு அவர் எனக்கு போன் செய்யவே இல்லை. படம் வெளியானதற்கு பின்பு அனைவரும் அந்த இயக்குனரை வச்சு செஞ்சுட்டாங்க.
நான் சொன்ன விமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் ஆலோசித்து பார்த்து படத்தை சரி செய்து வெளியிட்டிருக்கலாம்.
அதற்கு நேரமும் இருந்தது. ஆனால் அவருக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தைரியம் இல்லை பக்குவமில்லை” என்று கூறினார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் பேசிய வீடியோவை பார்த்த ரசிகர்கள், இவரது மகன் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பற்றி தான் எஸ்.ஏ.சி பேசியுள்ளார் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…