வெயில் தாக்கம்: நூதன மாட்டுச் சாண டெக்னிக்!

Published On:

| By Balaji

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க மக்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு நபர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நூதன வழியைக் கையாண்டுள்ளார். அவர் தனது கார் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசியுள்ளார். மேலும் மாட்டுச் சாணம் பூசப்பட்ட புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இப்படங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகிவிட்டன.

ரூபேஷ் கவுரங்க தாஸ் என்பவர் இப்புகைப்படங்களைப் பதிவிட்டு, “நான் பார்த்ததிலேயே மாட்டுச் சாணத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் இவர்தான். இது அம்தாவாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 45 டிகிரி வெயிலைச் சமாளிக்கவும், கார் சூடாவதைத் தடுக்கவும் திருமதி செஜல் ஷா அவர்கள் தனது கார் முழுவதும் பசு சாணத்தைப் பூசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்த டெக்னிக் பலரை ஆச்சரியப்படுத்தியது. இந்த டெக்னிக்கால் வாகனம் நிஜமாகவே வெப்பத்தைத் தாங்குகிறதா என்று மற்ற வாகன ஓட்டிகளும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க காரில் பசு சாணமா என்று நெட்டிசன்கள் கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். கிராமப்புறங்களில் வீடுகளின் சுவர்களிலும் தரையிலும் மாட்டுச் சாணம் பூசப்படுவது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பசு சாணம் கிருமிநாசினியாகவும், கொசு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி பல தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்தித்த இபிஎஸ் மனைவி ராதா-ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி](https://minnambalam.com/k/2019/05/21/93)

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)

**

.

**

[இடைத்தேர்தல் கணிப்பு: முந்துவது யார்?](https://minnambalam.com/k/2019/05/21/90)

**

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://minnambalam.com/k/2019/05/21/56)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)

**

.

.

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share