போட்டியிட்ட தொகுதிகளை கேட்கும் காங்கிரஸ்!

Published On:

| By Balaji

எந்தெந்த தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்குவது என திமுக காங்கிரஸ் கட்சிக்கிடையே கூட்டணி தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. மு.க ஸ்டாலின் தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவில் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ் பாரதி ஆகியோரும், காங்கிரஸ் சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, பங்கேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ‘தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியலை காங்கிரஸ் கொடுத்துள்ளது. அதில் பெரும்பான்மை கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளாக நிரம்பி உள்ளன.’ என்கின்றனர் கதர் சட்டையினர்.

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share