ஜி.எஸ்.டி-யால் பயன்பெறும் ஆட்டோமொபைல் துறை!

By Balaji

|

Published on 22 May 2017, 12:00 AM

ஆட்டோமொபைல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் இத்துறைக்கு நன்மை பயக்குவதாகவும், துறையின் வளர்ச்சிக்கு அடிகோலுவதாகவும் இருக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் கூட்டமைப்பின் தலைவர் வினோத் தசாரி கூறுகையில், “ஆட்டோமொபைல் துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள், இந்தியாவில் இத்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேறுபட்ட வரி விதிக்கப்பட்டுள்ளதால், அது இந்தியாவில் நிலையான வளர்ச்சியை எட்ட உதவும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கார்பன் அளவு கொண்ட வாகனங்கள் மீதான அரசின் தடை வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.

ADVERTISEMENT

தற்போதைய நிலையில் ஆடம்பரக் கார்களுக்கான வரி 52 முதல் 55 சதவிகிதமாக உள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தபிறகு இவற்றுக்கான வரி 42 முதல் 45 சதவிகிதமாகக் குறையும். ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகித வரி வரம்பில் ஆடம்பரக்கார்களுக்கு 15 சதவிகிதக் கூடுதல் வரியுடன் மொத்தம் 43 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும். சிறிய ரகக் கார்களுக்கு 15 சதவிகிதக் ஜி.எஸ்.டி. வரியுடன் 1 சதவிகித கூடுதல் வரியும், நடுத்தரக்கார்களுக்கு 28 சதவிகிதக் வரியுடன் 3 சதவிகித கூடுதல் வரியும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel