சிம்பு – ஹன்சிகா: ‘மஹா’ அப்டேட்!

Published On:

| By Balaji

இயக்குநர் யூ.ஆர். ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் திரைப்படம் மஹா. ஹன்சிகாவின் 50ஆவது படமான இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு இன்று (மே 24) முதல் தொடங்கவுள்ளது.

சிம்பு ஹன்சிகா இணைந்து நடித்த முதல் படம் வாலு. அச்சமயத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் காதலித்தும் வந்தனர். ஆனால், சில மாதங்களுக்குப் பின் இருவரும் பிரிந்து தங்கள் கேரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்நிலையில், ஹன்சிகா நடிக்கும் 50ஆவது படமாக உருவாகிவரும் மஹா என்ற புதிய படத்தில் சிம்பு இணைந்து நடிக்கவுள்ளார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது.

ADVERTISEMENT

யூ.ஆர். ஜமீல் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜிப்ரானின் திரைப்பயணத்தில் இது 25ஆவது படமாகும். திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்போது வெளியாகியிருக்கும் செய்தியில், இன்று முதல் சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதனை படத்தின் இயக்குநர் யூ.ஆர். ஜமீல் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளார். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது.

ADVERTISEMENT

.

.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க திமுக வியூகம்!](https://minnambalam.com/k/2019/05/23/167)

**

.

**

[மோடிகளை உருவாக்கும் மோடி](https://minnambalam.com/k/2019/04/11/19)

**

.

.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share