சாக்கடையை அகற்ற புதிய வகை ரோபோ!

Published On:

| By Balaji

பாதாள சாக்கடை கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதைத் தடுக்க கேரளப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய வகை ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் இதுவரை மனிதர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில் கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ய எந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுந்தது. உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டும், சாக்கடை கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதைத் தடுக்கும் பொருட்டும், கேரளத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய வகை ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தப் புதிய வகை ரோபோவினை 13 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தி சோதனை செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதைப் பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி நகர் சாலையில் உள்ள பாதாள சாக்கடையைச் சுத்தப்படுத்தும் சோதனை நேற்று (ஜூலை 13) தேசியத் துப்புரவுப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் இர்மானி முன்னிலையில் நடத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகராட்சி, மாநகராட்சி கோரினால் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கத் தயார். இந்த இயந்திரங்கள் சென்னை, ஹைதராபாத், கர்நாடகம் ஆகிய இடங்களுக்குப் பரிசோதனைக்கு தலா இரண்டு இயந்திரங்கள் அனுப்பப்படும்” என்று தெரிவித்தார். இந்தச் சோதனை வெற்றி அடைந்தால் இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

ADVERTISEMENT

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share